விருதுநகர்:

விருதுநகர் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

விருதுநகரின் மையப்பகுதியில் உள்ள தேசபந்து மைதானம் அருகே மீன் மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு பழக்கடை , மண்பானைகள் கடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு ஒரு கடையில் திடீரெனப் பற்றிய தீ, அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலையத்தினர், விரைந்து வந்து பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.