சென்னை:

ராஜீவ் காந்தியை நம்பர் 1 ஊழல்வாதி என்று பேசியதன் மூலம், நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் பிரதமர் மோடி தாண்டிவிட்டதாக ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.


உத்திரப் பிரதேசம் பிரடாப்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, என் செல்வாக்கை குலைக்கும் வகையிலேயே ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸ் கிளப்புகிறது.

மிஸ்டர் க்ளீன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட உங்கள் தந்தை ராஜீவ் காந்தி, இறக்கும்போது நம்பர் 1 ஊழல்வாதியாக இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், 1991-ம் ஆண்டு இறந்த ராஜீவ்காந்தியை நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் தாண்டி பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்திக்கு எதிரான குற்றச்சாட்டுகளை டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கி எறிந்ததை மோடிக்கு நினைவுபடுத்துகிறேன்.

ராஜீவ் காந்தி மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பாஜக அப்பீல் போகாதது மோடிக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.