போபால்

போபால் உயர்நீதிமன்றம் ஜாமீன்ன் கேட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

பைசல் என்ற பைசன் மத்திய பிரதேசத்தின் போபால் நகரை சேர்ந்தவர் ஆவார். இவர், பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினார் என குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மே மாதம் இதுபற்றி போபாலில் உள்ள மிஸ்ராட் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

அவரது இந்த செயல் இரு வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை தூண்டும் வகையில் அவரது இந்த செயல் இருந்துள்ளது என குற்றச்சாட்டு பதிவானது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் பைசல் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிபதி பாலிவால் ரூ.50 ஆயிரம் தனிநபர் ஜாமீன் மற்றும் அதே அளவு உத்தரவாத தொகையையும் பைசல் செலுத்தினால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் எனினும் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார். அதன்படி, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் காலம் முழுவதும் பைசல் நேரில் ஆஜராக வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 4-வது செவ்வாய் கிழமையும் நேரில் வர வேண்டும்.

அவர் வரும்போது, மிஸ்ராட் காவல் நிலையத்தில் உள்ள தேசிய கொடியின் முன் 21 முறை வணக்கம் செலுத்தி, 2 முறை பாரத் மாதா கி ஜெய் என உச்சரிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிபந்தனைகள் இந்தியாவில் பிறந்து, வளர்ந்த அவருக்கு அதற்கான பெருமையுணர்வு மனதில் தோன்ற வேண்டும் என்பதற்காக விதிக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளது.