வாஷிங்டன்

ருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாக போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை ஐநா சபை அறிவித்துள்ளது.

கடந்த 1984 ஆம் ஆண்டு டிசமர் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவு போபால் நகருக்கு மரண நேரமாக அமைந்தது. இந்நகரில் உள்ள அமெரிக்க உர நிறுவனத்துக்கு சொந்தமான யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து மிதைல் ஐசோ சயனைடு என்னும் விஷ வாயு கசிந்தது. கடினமான விஷமான இந்த வாயு போபால் நகர காற்று மண்டலத்தில் கசிந்தது. நகரில் ஆயிரக்கணக்கோனோர் தூக்கத்திலேயே மரணம் அடைந்தனர்.

அதிகாலை வரை நீடித்த இந்த சம்பவத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்பு அடைந்தனர். பாதிப்பு அடைந்தோரில் பலர் இன்னமும் முழுமையாக குணம் அடையாமல் தவித்து வருகின்றனர். ஐநா சபை இந்த விபத்தை 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய தொழிற்சாலை விபத்து என அறிவித்துள்ளது.

கடந்த 1919 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய 9 விபத்துக்களில் இதுவே அதிக பாதிப்பை ஏற்படுத்திய விபத்தாகும். இதற்கு அடுத்தபடியாக 1986 அம் வருடம் நடந்த உக்ரைனில் நடந்த அணுஆலை வெடிப்பு சம்பவத்தை ஐநா சபை பட்டியலிட்டுள்ளது. அதற்கு அடுத்துபடியாக மூன்றாம் இடத்தில் வங்க தேசத்தில் கடந்த 2013 ஆம் வருடம் நடந்த ராணா பிளாசா கட்டிடம் இடிந்து விழுந்த நிகழ்வு உள்ளது.