நடிகர் தனுஷ் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக தன்மை கொண்ட தனுஷ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுறவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும். ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவது உண்டு.

நிஜ வாழ்க்கையில் இப்படி பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே. அதில் உன்னை நான் முதன்மையானவனாக பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் நான் என்கின்ற அகந்தை அற்ற பணிவு, சிறந்த கலை, தொழில் நுட்ப அறிவு இது போதும்டா… இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக்கதவைத் தட்டும். பேரன்புமிக்க தங்கமகன் தனுஷ் இன்றைய நன்னாளில் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.