பாப்பாராப்பட்டி,

ர்மபுரி மாவட்டம் பாப்பாராப்ட்டியில் பாரத மாதா கோவில் கட்டக்கோரி உண்ணா விரதம் இருக்க முயன்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி அனந்தன் கைது செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நதிகளை இணைக்க வேண்டும், மது விலக்கை அமுல்படுத்த வேண்டும், சுப்பிரமணிய சிவாவின் எண்ணப்படி பாப்பாராப்பட்டியில் பாரத மாதா கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2ந்தேதி சென்னையில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட குமரி அனந்தன்  தர்மபுரி அருகே உள்ள  திருமல்வாடிக்கு நேற்று வந்து சேர்ந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, பாப்பாராப்பட்டியில்  பாரத மாதா கோவில் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பிக்காவிட்டால் இன்று காலை முதல் பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.

அதன்படி இன்று காலை  சுப்பிரமணியசிவா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர் அந்த பகுதியில் உண்ணாவிரதம் இருக்க தயாரானார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார்,  உண்ணாவிரதம் இருக்க உங்களுக்கு அனுமதி இல்லை என்றும்,  உங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துகிறோம் என்றும் கூறினர்.

ஆனால் அதை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற குமரி அனந்தனை கைது செய்து செய்த போலீசார் அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பேசிய குமரி அனந்தன், பாரதமாதா கோவில் கட்ட் அடிக்கல் நாட்டி 94 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நானும் 6 முறை நடை பயணம் மேற்கொண்டு வலியுறுத்தி உள்ளேன். எனது கோரிக்கையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றுவதாக கூறி இருந்தார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.