மும்பை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்ட பாரத் ஜெயின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம்வருகிறார்.

54 வயதாகும் பாரத் ஜெயின் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுப்பதை தனது வேலையாக செய்து இன்று ரூ.7.5 கோடி சொத்து வைத்துள்ளார்.

மும்பையில் பரபரப்பான சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் மற்றும் ஆசாத் மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜெயின் பிச்சை எடுக்கிறார். 10-12 மணி நேரம் இடைவேளையின்றி ‘வேலை’ செய்து ஒரு நாளைக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிச்சை எடுப்பதன் மூலம் அவருக்கு மாத வருமானம் ரூ.60,000 முதல் ரூ.75,000.

பிச்சைக்காரனாக தனது 40 ஆண்டுகால வாழ்க்கையில், ஜெயின் ரூ.7.5 கோடி சொத்து குவித்துள்ளார். இப்போது அவர் தனது குடும்பத்திற்கு ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வழங்கியுள்ளார்.

ரூ.1.4 கோடி மதிப்புள்ள 2 BHK பிளாட் வைத்துள்ள அவர் அங்கு தனது மனைவி, இரண்டு மகன்கள், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார்.

தானேயில் இரண்டு கடைகளை வைத்துள்ள அவர் மாத வாடகையாக ரூ.30,000 சம்பாதிக்கிறார்.

அதுமட்டுமின்றி, இவரது குடும்பம் ஸ்டேஷனரி கடையும் வைத்து வருமானம் சேர்க்கிறது.

புகழ்பெற்ற கான்வென்ட் பள்ளிகளில் படித்த அவருடைய இரண்டு மகன்கள் இப்போது அவரது மற்ற தொழிலுக்கு உதவுகிறார்கள்.

ஒரு பிச்சைக்காரன் கனவு காணக்கூடிய அனைத்தையும் பெற்றிருந்தாலும், கூடுதல் வருமானத்திற்கான பிற வாய்ப்புகளை உருவாக்கினாலும், தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி பிச்சை எடுப்பதை ஜெயின் தொடர்ந்து வருகிறார்.

இளம் வயதிலேயே பிச்சை எடுக்கத் தொடங்கிய அவர் பிச்சை எடுப்பதை மட்டும் கைவிடப்போவதில்லை என்று கூறிவருகிறார்.

ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஜெயின் பிச்சை எடுப்பதை ரசிப்பதாகவும், எதிர்காலத்தில் அதிலிருந்து விலகும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.

பிச்சை எடுத்து சம்பாதித்த பணத்தில் தாராளமாக இருப்பதாக கூறும் ஜைனா தனக்கு கிடைக்கும் பணத்தில் தொண்டு நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் நன்கொடை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இதுபோன்ற பணக்கார பிச்சைக்காரர்கள் அதிகளவு உள்ளனர் 2019 இல் ரயில் விபத்தில் இறந்த பிச்சைக்காரரான புர்ஜு சந்திர ஆசாத், ரூ. 8.77 லட்சம் பிக்சட் டெபாசிட் மற்றும் சுமார் ரூ.1.5 லட்சம் ரொக்கமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.