சென்னை

தென் இந்தியாவில் பாப்புலர் ஆக விளங்கும் செய்திச் சேனல்கள் எவை என்பதைப் பற்றி BARC  நிறுவனம் தனது சர்வே முடிவுகளை வெளியுட்டுள்ளது.  அதைப் பற்றி பார்ப்போம்

இந்தியாவின் பல செய்திச் சேனல்களும் தாம் தான் பாப்புலர் என போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து வருகின்றன.  அதிலும் டைம்ஸ் நவ் மற்றும் ரிபப்ளிக் டிவி இரண்டுமே நம்பர் ஒன் என சொல்லிக் கொள்கின்றன.  இவைகள் எல்லாம் ஆங்கில செய்தி சேனல்கள் என்பதும் வட இந்திய சேனல்கள் என்பதும் தெரிந்ததே.

பிராட்காஸ்ட் ஆடியோ ரிசர்ச் கவுன்சில் (BARC) இது குறித்து ஒரு கணக்கெடுப்பு எட்டு வார பதிவுகளை கொண்டு நிகழ்த்தியது.  அதாவது ஏப்ரில் (15-19 வாரங்கள்) மே (19-23 வாரங்கள்) என முடிவு வெளியாகின.

அதன் முடிவின்படி, பாலிமர் நீயூஸ் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.  இதே போல் ஏசியாநெட் கேரளாவிலும், டிவி9 தெலுங்கு அந்திரா, மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும், டிவி9 கன்னடா, கர்நாடகா மாநிலத்திலும் முதல் இடத்தில் உள்ளன.

தமிழ்நாடு மற்றும் பாண்டியில் மொத்தம் ஏப்ரல் மாதத்தில் 2.96 பில்லியன் பார்வையாளர்களும் மே மாதத்தில் 2.86 பில்லியன் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.  இதில் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் ஏப்ரல் மாதம் 51 மில்லியன்  பார்வையாளர்களும், மே மாதம் 38 மில்லியன் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.

மற்ற தொலைக்காட்சிகளில் தந்தி டிவி இரண்டாம் இடத்தையும், புதிய தலைமுறை மூன்றாம் இடத்தையும், நியூஸ்7 தமிழ் நான்காம் இடத்தையும், சத்தியம் டிவி ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன

கேரளா மாநிலத்தில் மொத்தம் ஏப்ரல் மாதத்தில் 953 மில்லியன் பார்வையாளர்களும் மே மாதத்தில் 901 மில்லியன் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.  இதில் ஏசியாநெட்  தொலைக்காட்சியில் ஏப்ரல் மாதம் 27 மில்லியன்  பார்வையாளர்களும், மே மாதம் 25 மில்லியன் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.

மற்ற தொலைக்காட்சிகளில் மனோரமா நியூஸ் இரண்டாம் இடத்தையும், மாத்ருபூமி நியூஸ் மூன்றாம் இடத்தையும், நியூஸ்18 கேரளா நான்காம் இடத்தையும், மீடியா ஒன் டிவி ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களி,ல் மொத்தம் ஏப்ரல் மாதத்தில் 3.04 பில்லியன் பார்வையாளர்களும் மே மாதத்தில் 2.91 பில்லியன் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.  இதில் ட்வி9 தெலுங்கு தொலைக்காட்சியில் ஏப்ரல் மாதம் 37 மில்லியன்  பார்வையாளர்களும், மே மாதம் 42 மில்லியன் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.

மற்ற தொலைக்காட்சிகளில் என் டிவி தெலுங்கு இரண்டாம் இடத்தையும், ஏபிஎன் ஆந்திரஜோதி  மூன்றாம் இடத்தையும், டிவி5 நியூஸ் தமிழ் நான்காம் இடத்தையும், 10 டிவி ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன

கர்நாடகாவில் மொத்தம் ஏப்ரல் மாதத்தில் 1.04 பில்லியன் பார்வையாளர்களும் மே மாதத்தில் 1.63 பில்லியன் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.  இதில் ட்வி9 கன்னடா தொலைக்காட்சியில் ஏப்ரல் மாதம் 62 மில்லியன்  பார்வையாளர்களும், மே மாதம் 54 மில்லியன் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.

மற்ற தொலைக்காட்சிகளில் பப்ளிக் டிவி இரண்டாம் இடத்தையும், சுவர்ணா நியூஸ் மூன்றாம் இடத்தையும், ஈடிவி நியூஸ் கன்னடா நான்காம் இடத்தையும், பிடிவி நியூஸ் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன