டில்லி: 
ந்தியாவின் சிறந்த திரை கலைஞர் விருது  பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்ததார்.
டில்லியில் நடைபெற்ற  சர்வதேச திரைப்பட விழாவிற்கான  நிகழ்ச்சியில் பங்கேற்ற  மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, திரைப்பட போஸ்டர் மற்றும் டிரைலர்களை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது.
மத்திய அரசின்  சிறந்த திரைக் கலைஞர் விருது,  திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்ததார். விரைவில் நடைபெற உள்ள 47வது சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்று கூறினார்.
சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 1,032 திரைப்படங்கள் திரையிடப்படும். 1,032 திரைப்படங்களில் 88 நாடு களைச் சேர்ந்த 192 திரைப்படங்கள் விழாவில் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்ம பூஷண்  விருது பெற்றுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,  தமிழ், ஹிந்தி என 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைபாடியுள்ளார்.  ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு, மத்திய அரசின்  சிறந்த திரைக் கலைஞருக்கான விருதினை இசையமைப்பாளர் இளையராஜா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.