பெங்களூரு:

பெங்களூருவில் புத்தாண்டு அன்று அதிகாலையில் பெண்ணை கட்டிபிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் வீடியோ ஆதாரம் மூலம் பிடிபட்டனர்.

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் பெங்களருவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. எம்.ஜி.ரோடில் நடந்த கொண்டாட்டத்தில் பெண்களிடம் வாலிபர்கள் சிலர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அன்று அதிகாலை பெங்களூரு கம்மனஹல்லி குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணுக்கு பைக்கில் வந்த இரண்டு வ £லிபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இந்த பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது.


இந்த வீடியோ காட்சிகள் சமூக வளை தளங்களில் பரவ தொடங்கியது. இதன் பின்னர் பெங்களூரு போலீசார் விழித்துக் கொண்டு 8 பேரிடம் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவன் பெயர் அய்யப்பா. வீடியோவில் இருந்த மற்றொருவன் லெனின் என்கிற லெனோ. மேலும், சுதேஷ், சோமசேகரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் கொரியர் டெலிவரி வேலை பார்ப்பவர்கள்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் பிரவின் சுத் கூறுகையில், அதிகாலை 2.40 மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்ற அந்த பெண்ணை பைக்கில் சென்ற இருவர் பார்த்தனர். பின்னர் பைக்கை திருப்பிக் கொண்டு வந்து, ஒருவன் மட்டும் அதிலிருந்து இறங்கி அந்த பெண்ணை கட்டிபிடித்து முத்தம் கொடுக்க முயற்சிக்கிறான்.

அந்த பெண் அவனுடன் கடுமையாக சண்டையிட்டார். பின்னர் அந்த பெண்ணை பைக்கில் உட்கார்ந்திருந்த தனது நண்பரிடம் கொண்டு செல்கிறான். இருவரும் சேர்ந்து அந்த பெண்ணின் ஆடைகளை அவிழக்க முயற்சிக்கின்றனர். அந்த பெண்ணின் கடுமையான போராட்டத்தை தாக்குபிடிக்க முடியாமல், அவரை கீழே தள்ளிவிட்டு பைக்கில் பறந்துவிட்டனர். இருவரும் கடந்த சில தினங்களாக அப்பெண்ணின் நடமாட்டத்தைக கண்காணித்து இந்த செயலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

அந்த நேரத்தில் பெண்ணுக்கு அங்கு என்ன வேலை?

இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் அந்த இரவு நேரத்தில் ஆண் துணையின்றி ஏன் வந்தார் என்ற எதிர்விணை கேள்விகளும வரத் தொடங்கியுள்ளது. சமூக வளைதளங்களில் ஆண், பெண் இருபாலரும் இந்த கேள்வியை முன்வைத்துள்ளனர்.
இதற்கும் கண்டனம் வலுத்து வருகிறது.. அதில் சில..

நாட்டில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண் மீது என்ன தவறு இருக்கிறது என்பதை ஆராயும் நிலை தான் உள்ளது. முன்னோக்கி பார்க்கும் எண்ணம் இந்திய சமுதாயத்திடம் ஏற்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

ஒரு பெண் மீது குற்றம்சாட்டுவது மிகவும் எளிதாகிவிட்டது. நேரம், ஆடை போன்ற காரணங்களை கூறாமல் அனைத்து இடங்களும், அனைத்து நேரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

காம வெறியர்களுக்கு நேரம் காலம் என்று எதுவும் கிடையாது. பகலிலும், இரவிலும் இந்த செயல்களில் அவர்கள் ஈடுபடதான் செய்வார்கள்.

நாடு எண்ணத்தான் வளர்ந்தாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நாகரீகம் வளர்ந்தாலும் பெண்ணுக்கு எதிரான போக்கு தான் இன்னமும் நிலவுகிறது. பெண்ணின் உடல் அவளுக்கு சொந்தமில்லை என்றே பலரும் நினைக்கின்றனர்.