பெங்களுரூ:
பெங்களூரில் ஆட்டுப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூருவின் கலபுரகி மாவட்டத்தில் ஆட்டுப் பண்ணையில் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ கஞ்சாவை பெங்களூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக கூறப்படும் ஆட்டோ டிரைவரை கைது செய்தபின்னர், போலீசார் ஆதாரங்களை கண்டுபிடித்து கலபுரகி மாவட்டத்தின் ஆட்டுப் பண்ணையில் நிலத்தடியில் சேமிக்க வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை சேஷாத்ரிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் ஒடிசாவிலிருந்து கர்நாடகாவிற்கு காய்கறி லாரிகளில் ஏராளமான கஞ்சா கொண்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட 4 பேர் அவற்றை மாநிலம் முழுவதும் விநியோகித்தனர் என்றும் சேஷாத்ரிபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் பெங்களூரை சேர்ந்த 37 வயது ஆட்டோ ரிக்ஷா டிரைவர் ஞானசேகரன் நகரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்றதாக கூறப்படுகிறது. விஜயபுறாவின் சின்தகியிளுள்ள சிந்துநாத் என்ற 22 வயது இளைஞர் கஞ்சாவை பெற்று மும்பைக்கு அனுப்பி வைத்ததாகவும், 39 வயதான நாகனாத் என்பவர் கஞ்சாவை வாங்கி கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்க்கு விற்றதாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 34 வயதான சந்திரகாந்த் நிலத்தடியில் கஞ்சா சேமித்து வைக்கப்பட்ட ஆட்டுப் பண்ணையின் உரிமையாளராவார் என்று சேஷாத்திரிபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.