தேவனஹள்ளி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி
பெங்களூரு வடக்கு புறநகரில் உள்ள தேவனஹள்ளியின் போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் அவர்கள் தனித்து தெரிந்திருக்க மாட்டார்கள் . ஆனால் சில நேரங்களில் தாமதமான சிகிச்சையின் காரணமாக இறந்து போகும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை கண்டு அவர்கள் கூடுதலாக வித்தியாசமான ஒரு செயலை செய்ய முடிவு செய்தனர்.
அபாயகரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வந்து மருத்துவ சிகிச்சைக்குப் பணம் செலுத்துவதற்காக காத்திருப்பதற்கு பதிலாக , விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பணம் சேகரிக்க போலீஸார் முடிவு செய்தனர். பிப்ரவரியில் நடந்த கோரமான ஒரு சாலை விபத்தில் உடல் பாதியாக துண்டுப்பட்ட நிலையிலும் ஹரீஷ் நஞ்சப்பா என்பவர் தனது கண்களை தானம் செய்ததினால் மாநில அரசு அவரது நினைவாக ஒரு திட்டத்தை துவக்கியுள்ளது. இந்த திட்டம் அறிவிப்பதற்கு பல ஆண்டுகள் முன்னரே தேவனஹள்ளி போக்குவரத்து காவல்துறையினர் அவர்களது உதவியைச் செய்து வருகின்றனர்.
முக்கியமந்திரி சந்த்வானா ‘ஹரிஷ்’ திட்டத்தின் கீழ், விபத்து நடந்து 48 மணிநேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அரசாங்கம் ₹25,000 வரை செலுத்துகிறது.
அபாயகரமான சாலை விபத்துக்களுக்குப் பெயர் போன ஒரு இடத்தில் தான் அந்த போலீஸ் நிலையத்தின் அதிகார வரம்பு உள்ளது. சாலைகள் நன்றாக இருப்பதால், டிரைவர்கள் வேகமாக செல்வர். பல இடங்களில் சராசரி வேகம் 120-160 கி.மீ ஆக இருக்கும். பல்லாரி சாலை, ஏலஹங்கா, எம்.இ.ஐ.டி. சந்திப்பு, கண்ணமங்கலா, இந்திய விமானப்படை பகுதி, போன்ற இடங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு அபாயகரமான விபத்து உட்பட எட்டு விபத்துக்களைச் சந்திக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாதசாரிகள்.
பெரும்பாலும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களைக் கண்டுபிடிக்க போராடுகின்றனர். ஆனால் கட்டணம் செலுத்தப்படும் வரையில் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுக்கின்றனர். உறவினர்கள் இல்லாததால் யார் பணத்தை செலுத்த முடியும்? இதன் விளைவாகத் தான் இந்த பொன்னான நேரத்தை இழக்கிறோம்.
தேவனஹள்ளி போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் எல் ஒய், பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலை கண்டு மிகவும் வருந்தியதால் தான் இந்த செயலை செய்ய முடிவெடுத்ததாகக் கூறினார். “மருத்துவ நிவாரண தாமதமாவதால் தான் பல உயிர்களை இழக்கிறோம். நாங்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, பணம் தேவைப்படும் CT ஸ்கேன் மற்றும் பிற சோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். ”
ஒரு நாள் அவர், தனிப்பட்ட பங்களிப்பின் மூலம் ஒரு அவசரகால நிவாரண நிதி (ERF) இருக்க வேண்டும் என்று அவரது ஊழியர்களிடம் கூறினார். அவர் ரூ .5,000 நன்கொடை அளித்தார் பிறகு அவரது சகாக்களும் பணம் கொடுத்தனர் ஆனால் இந்த பங்களிப்புகள் எல்லாம் தன்னார்வமாக வந்தன.
இந்த முன்முயற்சி ஒருவேளை இந்தியாவிலேயே முதன்முதலானதாக இருக்கலாம். போலீஸாரிடம் ரூ .15,000 எப்போதும் உடனிருக்கும். விபத்து பற்றி அறிந்த அக்கணத்தில், அந்த இடத்திற்குச் செல்லும் அதிகாரி உதவித் தொகையையும் உடன் எடுத்துச் செல்வார். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் போது, உடனடி மருத்துவ செலவிற்கு இந்த உதவித் தொகை உபயோகப்படுத்தபடுகிறது.
இந்த திட்டம் தொடங்கிய பின் எட்டு உயிர்களை காப்பாற்றியுள்ளதாக ராஜேஷ் கூறினார். “பல சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் பணத்தை ஒப்படைத்தார்கள். சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர் எங்களது அனைத்து முயற்சிகளுக்குப் பின்னும் இறந்து விடுவார் ஆனால் நாங்கள் உறவினர்களிடமிருந்து மீண்டும் பணம் கேட்பதில்லை, “என்று அவர் கூறினார். எனினும் அவர் stray incident-தவறான சம்பவங்களுக்காக விபத்து நிவாரண நிதியை வழங்க முடியுமெனவும் ஆனால் வழக்கமான அடிப்படையில் உதவி வழங்க முடுயாதெனவும் கூறினார்.