பெங்களூரு: ’40 சதவீத கமிஷன்’ அரசு, ‘பேசிஎம்’ என பாஜக மாநில அரசுமீது குற்றம் சாட்டியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜரான ராகுல்காந்திக்கு கர்நாடக நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

கடந்த 2023ல் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., அரசின் மீது ’40 சதவீத கமிஷன்’ அரசு, ‘பேசிஎம்’ என, குற்றம் சாட்டி சுவர்களில் காங்கிரசார், அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை படத்துடன் போஸ்டர்கள் ஒட்டினர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சித்தராமையா, சிவகுமார் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., வை 40 சதவீத கமிஷன் அரசு என, குற்றம் சாட்டினர்.  இதுமட்டுமின்றி 2023, மே 5ல், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தனர்.

இதுகுறித்து பாஜக தரப்பில் ராகுல்காந்தி உள்பட பலர்மீது  அவதூறு வழக்கி தொடரப்பட்டது. உள்ளூர் பத்திரிகைகளில் பாஜகவை ஊழல்வாதி என்று விளம்பரம் செய்ததை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக பிரிவு தொடர்ந்த அவதூறு வழக் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

  கடந்த விசாரணையின்போது, மாநில முதல்வர் சித்தராமையா, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.  விசாரணையைத் தொடர்ந்து ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வக்கீல், அவர் நேரில் ஆஜராக வாய்தா கேட்டார். இதையடுத்து 7-ந்தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி இன்றைய விசாரணையின்போது,   நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல்காந்தி  டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார் ராகுல் காந்தி. விமான நிலையம் வந்தடைந்த ராகுலை கர்நாடக  முதல்வர்  சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பின்னர் நீதிமன்ற விசாரணையின்போது ராகுல்காந்தி ஆஜரானார்.

விசாரணையைத் தொடங்ரந்து, நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்திக்கு முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.