
பெங்களூரு:
பெங்களூருவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பதாமி தொகுதியில் உள்ள ஹம்பி நகர் பகுதியில், பாஜக தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அதுகுறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து சித்தராமையா ஆதரவாள்ர்களுக்கும், பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாகவும் மாறியுள்ளது.

மேலும் சில இடங்களிலும் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மோதல் நடந்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு டிஜிபி ரவிசேனன்னார், வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மட்டுமே ஏற்பட்டதாகவும், போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த தாகவும் கூறி உள்ளார்.
