பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கோவிட் 19 தடுப்பூசி மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கோவிட் 19 தடுப்பூசி மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் நலச்சங்கங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை பெங்களூரு மாநகராட்சி மேற்கொள்கிறது. இது குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரியான ராகேஷ் சிங் கூறி இருப்பதாவது:

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி மையங்களை திறப்பது குறித்து நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறோம் என்று கூறி உள்ளார்.

ஏப்ரல் 5ம் தேதி வரையில் பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 8,46, 062 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனிடையே பெங்களூருவில் கொரோனா 2வது  அலை ஏற்பட்டதை அடுத்து, நகரத்தில் தடுப்பூசி விகிதத்தை இரட்டிப்பாக்க மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.