பெங்களூரு
வரும் மே 1 ஆம் தேதி முதல் பெங்களூரு – சென்னை டபுள் டெக்கர் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”தினமும் தமிழக தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு தினமும் வந்தே பாரத், சதாப்தி, ‘டபுள் டக்கர்’ உள்ளிட்ட ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் பெங்களூரு – சென்னை சென்டிரல் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் வரும் மே 1 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
வழக்கமாக பெங்களூருவில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.22626) அதேநாள் இரவு 8.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
வரும் மே மாதம் 1-ந்தேதி முதல் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். அதாவது ஏற்கனவே புறப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் முன்பாக புறப்படவுள்ளது.”
என்று கூறப்பட்டுள்ளது.