பெங்களூருவில் ஏடிஎம்களில் சேர்க்க வேண்டிய 1.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்துடன் வேன் டிரைவர் கடந்த 23-ஆம் தேதி எஸ்கேப் ஆனது நினைவிருக்கலாம். கடந்த ஞாயிறன்று மாலை அந்த டிரைவரின் மனைவி எல்வின் என்பவர் ரூ.79.8 லட்சம் பணத்தை போலீசிடம் திரும்பி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். மீதமுள்ள பணத்தை திங்களன்று தன் கணவர் வந்து ஒப்படைப்பார் என்று உறுதி கூறி இருக்கிறார்.

elwin

வேன் டிரைவர் டோம்னிக்கின் மனைவி எல்வின்

பணத்துடன் எஸ்கேப் ஆன டிரைவரின் பெயர் டோம்னிக். அவர் ஏடிஎம் இயந்தரங்களில் சேர்க்க வேண்டிய 1.32 கோடி பணத்துடன் கூடிய வேனை ஓட்டிச் சென்றிருக்கிறார். பின்னர் பணத்தாசை அவரை தூண்டவே அந்த வேனில் இருந்து 95 லட்சம் பணத்தை எடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். மீதமுள்ள 42 லட்சம் பணத்துடன் போலீஸாரிடம் அந்த வேன் சிக்கியிருக்கிறது. போலீஸ் இன்னமும் டோம்னிக்கை தேடி வருகிறது.
 

[youtube-feed feed=1]