பெங்களூரில் பெய்து வரும் கனமழை காரணமாக புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 16 பேர் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 5 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக மழைபெய்து வருகிறது, நேற்றிரவு தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.

இதனால் புறநகர் பகுதிகள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கியது.

இந்த நிலையில் பெங்களூரின் புறநகர் பகுதியான ஹொரமாவு-வை அடுத்த பாபு சாஹிப் பாளையா-வில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹென்னூர் காவல் நிலைய எல்லையில் இன்று மாலை 3:45 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தை அடுத்து இதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

16 பேர் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 5 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.