பெங்களூரு,

ர்நாடகாவில் கடந்த வாரம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள சைன் போர்டுகளில் கன்னடம் மற்றும் இந்தியில் மட்டுமே அறிவிப்புகள் உள்ளன. ஆங்கிலம் பதிய வேண்டிய இடத்தில் இந்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பொதுவாக ரெயில் நிலையங்களில் மாநில மொழியிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்புகள், ஊர் பெயர்கள் இருக்கும். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இந்திய மொழியை திணிக்கும் பொருட்டு ரெயில் நிலையங்களில் உள்ள ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக இந்தியை பதிவு செய்து வருகிறது.

இதன் காரணமாக மற்ற மாநில மொழியும், இந்தியும் தெரியாத பயணிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தற்போது, கர்நாடகா மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், சைன் போர்டுகளிலும் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் எழுதப்பட்டிருப்பது கன்னட மக்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது.

இதுகுறித்து கன்னட மொழியை காக்கும் குழுவான பவனாசி பலகா பிரகாசனா ( Banavasi Balaga Prakashana)  என்ற அமைப்பு சமூக வலைதளங்களில் மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது.

இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற வற்றில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அதில்  மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

“நம்ம மெட்ரோ இந்தி பேடா… நம்ம மெட்ரோ கன்னட சாகு”  #namma metro hindi beda and #namma metro kannadasaaku# என்று பதிவிட்டு மத்திய அரசின் இந்தி எதிர்ப்புக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.

அதில் மத்திய அரசின் இந்துத்துவாவை தடுக்கவும், கன்னட மொழியை பிரதானப்படுத்தவும் உறுதியேற்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக கூறி உள்ளது.

மத்தியஅரசின் தேவையற்ற இந்தி திணிப்பை உடனே கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் இந்த செயலுக்கு டுவிட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டில்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் கன்னடத்தில் சைன் போர்டு வைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் மற்றொரு கன்னட சங்கமான அருணா ஜவல்கல் சங்கத்தின் துணைத் தலைவர் டெக்கான் ஹெரால்ட் கூறும்போது,

“நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாம் நிச்சயமாக அதன் சுமத்துதலை அனுமதிக்க மாட்டோம்.” என்று கூறியுள்ளார்.

நம்ம மெட்ரோவில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டுமே எழுதி, மாநில அரசோடு ஒத்துப்போக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கன்னட வளர்ச்சி ஆணையம் மெட்ரோ நிர்வாகத்துக்கு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

“நாம மெட்ரோ ரெயில் சேவை திட்டம் ஒரு மாநில திட்டம். இதில் இந்தி மொழியில் உள்ள அடையாளங்கள் தேவையற்றது  மற்றும் மாநில அரசாங்கத்தின் அறிவிப்பு (2008 தேதியிட்ட) மற்றும் இரண்டு சுற்றறிக்கைகள் (1982 மற்றும் 1993 தேதியிட்டவை) ஆகியவற்றை மெட்ரோ நிர்வாகம் மீறி உள்ளது என்று அதன் தலைமை அதிகாரி பேராசிரியர் எஸ்.ஜி. சித்தாரமையா கூறி உள்ளார்.

ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி எழுதிய மெட்ரோ நிர்வாகத்துக்கு எதிராக விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்கள் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்லில் உள்ள ஆங்கில எழுத்துக்களை அழித்துவிட்டு இந்திய எழுத்துக்களை எழுதி பிரச்சினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.