ஐ.பி.எல்.-2016 இறுதிப் போட்டி மற்றும் ஒரு தகுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ராய்பூர், ஜெய்ப்பூர், விசாகப்பட்டிணம், கான்பூர் ஆகிய இடங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யும்படி பி.சி.சி.ஐ., மும்பை மற்றும் பூனே அணியின் உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டது.
பூனே அணியின் மாற்றுத்தாய் அரங்கமாக விசாகப்பட்டின மைதானம் செயலபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணி இடத்தைத் தேர்வு செய்வதற்கு இரண்டு நாள் அவகாசம் கேட்டுள்ளது.

அரைஇறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் என்றுத் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, மே 1 அன்று குறிக்கப்பட்டுள்ள பூனே மற்றும் மும்பை அணிக்கிடையிலான போட்டியை பூனேவில் நடத்திக் கொள்ள மும்பை உயர் நீதிமன்றத்திடம் மன்றாட வுள்ளதாக ராஜிவ் ஷுக்லா தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel