கொல்கத்தா:
பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிக்தலா என்ற இடத்தைச் சேர்ந்த சுஜித் டேவின் என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நீர்ப்பாசன அமைச்சகத்தில் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராகல் பெரா என்பவர் தன்னை அணுகியதாகவும், அவரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ராகல் பெரா தனக்கு வேலை வாங்கித் தரவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்படும் ராகல் பெராவை போலீசார் கைது செய்தனர்.
பர்பா மெதினிப்பூர் மாவட்டத்தில் புயல் நிவாரணப் பொருட்களைத் திருடியதாக சுவேந்து அதிகாரி மற்றும அவரது சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.