கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் நடந்து வரும் 3-வது கட்ட வாக்குபதிவின் முதல் 3 மணி நேரத்தில் 14.62% வாக்குபதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் மூன்று மணி நேரத்தில் 14.62 சதவீத வாக்குப்பதிவு முறையே மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் நடைபெற்ற கட்டம் -1 மற்றும் கட்டம் -2 வாக்கெடுப்புகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளது.

ஹூக்லியில் உள்ள கோகாட்டில் இருந்து வன்முறை நடந்ததாக தெரிய வந்துள்ளது. இதே போன்று நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜக தொண்டரின் தாய் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதேபோல், தெற்கு 24 பர்கானாவில் உள்ள சாஸ்தா, தாகிரா, பாபுல்தங்கா மற்றும் டயமண்ட் ஹார்பர் ஆகிய பல்வேறு சாவடிகளில் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

7 தொகுதிகள் வாக்கெடுப்புக்கு செல்லும் ஹூக்லி மாவட்டத்தில், 17.35 சதவீதத்தில் மிக அதிகளவில் வாக்குபதிவாகியுள்ளது. ஹவுரா மாவட்டத்தைத் தொடர்ந்து 8 தொகுதிகளில் 15, 52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தெற்கு 24 பர்கானாவின் 16 தொகுதிகள் வாக்குப்பதிவின் முதல் மூன்று மணி நேரத்தில் மிகக் குறைந்த சதவீதமாக 12.81 ஆக வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று காலை, திரிணாமுல் தலைவர் கோஷின் இல்லத்தில் மூன்று ஈ.வி.எம் மற்றும் நான்கு வி.வி.பி.ஏ.டி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையம் அதிகாரி ஒருவரை இடைநீக்கம் செய்துள்ளது. 31 சட்டமன்றத் தொகுதிகளில்முன்முனை போட்டி காணப்படுகிறது.

இந்த தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 78,56,474 ஆகும், இதில் 4,049 சேவை வாக்காளர்கள், 39,97,218 ஆண் வாக்காளர்கள் மற்றும் 38,59,013 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 8,480 பிரதான மற்றும் 2,391 துணைச் சாவடிகள் உட்பட 10,871 ஆகும். 80 பிளஸ் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,26,177, 64,083 பேர் பிடபிள்யூடி (மாற்றுத்திறனாளிகள்) வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 243 ஆகவும், வெளிநாட்டு வாக்காளர்கள் 2 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.