பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ – ஆசிப் அலி சர்தாரி தம்பதியின் மகள் பக்தாவருக்கும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு வியாபாரம் செய்து வரும் முகமது சவுதாரி என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

பக்தாவர்- முகமது திருமண நிச்சயதார்த்தம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள இன்று நடைபெறுகிறது.

ஆசிப் அலி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின், இணையதளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணமகன் முகமது, துபாயில் வியாபாரம் செய்து வருகிறார்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வருவோர்,  தங்களுக்கு கொரோனா இல்லை என 24 மணி நேரத்துக்கு முன்பாக டாக்டர்கள் அளித்த சான்றிதழை, ஈ-மெயில் மூலம்  அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வருவோர், மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என்றும்,யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுகிறது.

-பா.பாரதி.

[youtube-feed feed=1]