ழகான முக தோற்றம் வேணுனா அதுக்கு பியூட்டி பார்லர் தான் போகணும்னு அவசியமில்லை. நம்ம வீட்டு சமையலறைக்கு போனாலே போதும்..

அவ்வளவு அருமையான இயற்கையான அழகு சாதனப் பொருட்கள் இருக்கு நம்ம சமையலறை யில் ஆச்சர்யம் இருக்கா. ஆனா இதான் உண்மை. சமையல் அறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் நம் முக பொலிவிற்க்கு, மற்றும் நம் உடல் ஆரோக்கியத்திற்க்கு எவ்வளவு பயன்படுதுங்கறத பாக்கலாம்.

பிரஷ்ஷான காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவதுடன் அவற்றை அழகு சாதன பொருட்களாகவும் பயன்படுத்தலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணரும் Skinella- வின் இயக்குனருமான டோலி குமார்.

மேலும் இவர் கூறும்போது, “ப்ளூ பெர்ரியை நமது தோலில் அப்ளை பண்ணுவதன் மூலம் நமது தோலை பொலிவுடன், மிருதுவாகவும் வைத்து கொள்ளலாம்.

மேலும் வைட்டமின்கள் சி மற்றும் ஏ, மினரல்ஸ், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள திராட்சை பழங்கள் நம் தோலை UV கதிர்களிலிருந்து காக்கும் பாதுகாப்பு படலமாக பயன்படுகின்றன. அதே போல வைட்டமின சி அதிகமுள்ள ஆரஞ்சு பழமும் நம் தோலை சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

அத்துடன் மிருதுவாக அரைக்கப்பட்ட சிவப்பு கொய்யாவின் விதைகளை தோலில் தடவிக் கொள்வதன் மூலம் தோல் செல்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன் தோல் சுருக்கங்களையும் நீக்கிவிட முடியும். குருதிநெல்லியை (Cranberry) நமது தோலை சுத்தமாக்கவும், முகப்பருவை நீக்கவும் உபயோகிக்கலாம். தேனுடன், ஓட்ஸ்ஸை கலந்து தடவி வந்தால் தோல் சென்சிட்டிவாவதுடன் தோலில் உள்ள அழுக்குகளும், பரு தழும்புகளும் நீங்கிவிடும்” என்கிறார்.

உலக அழகியும், பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரின் தோலை மிருதுவாக பராமரிக்க மஞ்சள், சந்தனம், கடலை மாவு இவற்றுடன் ரோஸ் வாட்டர் சேர்ந்த கலவையையும், கூந்தலின் எழிலுக்கு தேங்காய் எண்ணையையும் மட்டுமே பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய சமையலறைகள் பெண்களின் மேனி பராமரிப்பு பொருட்களின் தங்க சுரங்கமாகும். பழங்காலங்களில் நமது மகளிர் மூலிகைகள், வாசனை பொருட்கள், மஞ்சள் போன்ற மசாலா பொருட்களையே பெரிதும் நம்பியிருந்தனர்.

இப்போது இருப்பவை போன்ற வேதி பொருட்கள் கலந்த, அதிகம் பின் விளைவுகளை உண்டாக்கும் எந்த க்ரீமும், ஜெல்லும் அந்த காலங்களில் உபயோகத்தில் இருந்ததில்லை. பெரும்பாலும் விட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களிலிருந்து எதிர்பாராதவிதமாக கண்டுபிடிக்கப்பட்ட நன்மைகளை மட்டுமே தரும் மருந்து போன்ற பொருட்கள் மட்டுமே அழகு சாதன பொருட்களாக உபயோகத்தில் இருந்தன.

“நமது வீட்டிலுள்ள மஞ்சளில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லையென்றே சொல்லலாம். நோய் எதிப்பு சக்தியில் முதன்மையில் இருப்பது நமது மஞ்சள். இதனை பவுடர் வடிவில் நேரடியாகவே நம் தோலில் அப்ளை செய்வதன் மூலம் காயங்களை எளிதில் குணப்படுத்தலாம். மேலும் முகப்பருவை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது நமது மஞ்சள்.

பசும்பாலில் குங்குமப்பூவை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி சில நிமிடங்கள் ஊற விட்டு பின் கழுவி வருவதன் மூலம் பரு மற்றும் தழும்பு போன்ற கறைகளை எளிதில் நீக்கலாம். குங்குமப்பூவை சிறிதளவு நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து அத்துடன், துளி உப்பு, ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணை சேர்த்து தடவி வருவதன் மூலம் பளபளப்பான முகத்தை பெறலாம்” என்கிறார் தோல் மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணருமான பிரியங்கா தியகி.

மேலும், “அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பீன்ஸ் பெரும்பங்கு வகிக்கிறது. இதற்கு அதன் வாசனை மற்றும் வயோதிகத்தை எதிர்க்கும் தன்மையுமே காரணம். எனவே பீன்ஸ் விதைகளை நமது தோல் பராமரிப்புக்கு தாராளமாக உபயோகிக்கலாம்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார் இவர்.

இனியென்ன பெண்களே, சமையலறையில் புகுந்து அழகு மங்கையாக புதுப்பொலிவுடன் வெளியே வாருங்கள்…”

-லட்சுமி பிரியா…

[youtube-feed feed=1]