டாக்கா: வங்க போராட்டங்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ சதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஷேக் ஹசீனாவை வீழ்த்தி வங்கதேசத்தில்  இந்திய எதிர்ப்பு அரசை நிறுவும் முயற்சியாகவே இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக பிரபல பத்திரிகையான ஃபிளிட்ஸ், சிஎன்என் போன்ற ஊடகங்கள்  செய்தி வெளியிட்டு உள்ளது.

வங்கதேசத்தில்  ராணுவ ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா  உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டதால், 15 ஆண்டுகால ஆட்சியை முடித்துக் கொண்டு பிரதமர் ஷேக் ஹசீனா திங்களன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இநதியா வந்தடைந்தார். அவருக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

ஏற்கனவே இதுபோன்ற கலவரம் மற்றும் வன்முறையால் இலங்கை அரசை கவிழ்த்து கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த நிலையில், அதே பாணியில் தற்போது வங்க தேசத்திலும் வன்முறை வெறியாட்டம் நடைபெற்றுள்ளது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் வங்கதேச வன்முறை கலவரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ, ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்து, இந்தியாவுக்கு எதிரான அரசை நிறுவ விரும்புவதால், பங்களாதேஷில் பதற்றத்தை ஏற்படுத்த மாணவர்களைப் பயன்படுத்துகிறது என்று பிரபல ஊடகமான  சிஎன்என்  உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

அதுபோலவங்கதேச கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருப்பதாக குற்றம் சாட்டி,  வங்கதேசத்தின் முன்னணி வார இதழான `பிளிட்ஸ்’ ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி  கூறியுள்ளார்.

வங்கதேச பிரதமராக பதவி வகித்த வந்த  ஹசீனாவை வெளியேற்ற ஐஎஸ்ஐ ஸ்லீப்பர் செல்கள் டாக்காவில் முழுநேர வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ள சிஎன்என், “டாக்காவில் நெருக்கடியை அதிகரிக்க ஐஎஸ்ஐ ஜமாத் மற்றும் அவர்களின் மாணவர் பிரிவு சத்ரா ஷிவிரைப் பயன்படுத்துகிறது. ஜமாத் பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படுவதால், அவர்களுக்கு அவ்வப்போது ரகசிய நிதி வழங்கப்பட்டது. அவர்கள் டாக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து விளக்கங்களையும் அறிவுறுத்தல்களையும் வழக்கமாகப் பெறுகிறார்கள், ”என்று  தெரிவித்தனர்.

ஆதாரங்களின்படி, ஐஎஸ்ஐ அவாமி லீக் அரசாங்கத்தை இந்தியா ஆதரிக்கிறது என்று கருதுகிறது மற்றும் பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்க அதை அகற்ற முயல்கிறது. இது, பாகிஸ்தானுக்கு பல்வேறு நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்குள் நுழையும் பல இடங்களை வழங்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருதப்படும் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (பிஎன்பி) ஆட்சிக்குக் கொண்டுவருவதை ஐஎஸ்ஐ நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக அமைதியின்மை, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் காஷ்மீரில் இதேபோன்ற உத்தியை ஐஎஸ்ஐ பயன்படுத்துகிறது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் கூறும் இறுதி இலக்கு, ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவுவதும், ஐ.நா-கண்காணிப்பு தேர்தல்களை நடத்துவதும் ஆகும், தற்போதைய நோக்கம் ஹசீனாவை பலாத்காரம் அல்லது சர்வதேச அழுத்தத்தின் மூலம் வெளியேற்றி, பிஎன்பி-ஜமாத் தலைமையிலான அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் வங்கதேசனத்தின் பிளிட்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையில், வங்கதேச மாணவர்கள் போராட்டத்தை 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஎன்பி கட்சிக்கு முக்கிய தொடர்பு உள்ளது. பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பெர்க்மான் போராட்டத்தை தூண்டினார்.  பிரிட்டனுக்கு தப்பியோடிய பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான், அங்கிருந்து கொண்டு வங்கதேச போராட்டத்தை வழிநடத்தினார். இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் ஆவார்.

வங்கதேச மாணவர் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் இருக்கிறது. மாணவர்களின் பெயர்களில் ஏராளமான தீவிரவாதிகளும் களமிறங்கி, போராட்ட களத்தை போர்க்களமாக மாற்றினர்.

வங்கதேசம் தற்போது செழுமையாக இருக்கிறது. இதை பாகிஸ்தான் போன்று திவாலான நாடாக மாற்ற பழமைவாத முஸ்லிம்களும், தீவிரவாதிகளும் சதி செய்து வருகின்றனர் என அந்த  கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கலவரம் குறித்து முன்னாள் பிரதமர்  ஷேக் ஹசீனா அண்மையில் கூறும்போது, “வங்கதேசம், மியான்மரின் சிலபகுதிகளை ஒன்றிணைத்து புதிய கிறிஸ்தவ நாட்டை அமைக்க அமெரிக்கா விரும்பு கிறது. வங்கக் கடலில் புதிய கடற்படைத் தளம் அமைக்கவும் அந்த நாடுமுயற்சி செய்கிறது. இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே எனக்கு எதிராக சதி நடக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

 ஷேக் ஹசீனாவின் மகன் ஷாஜிப் வாஸத் ஜாய் அமெரிக்காவில் வசிக்கிறார்.  அவர் கூறும்போது,  எனது தாயார் வங்க தேச மக்கள், நாட்டின் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தார். ஆனால் ஒரு சிறிய கூட்டம் அவருக்கு எதிராக சதி செய்து மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை எனது தாயார் ராஜினாமா குறித்து சிந்தித்துகூட பார்க்கவில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் குடும்பத்தினரின் அறிவுரைப்படி வங்கதேசத்தை விட்டு அவர் வெளியேறி உள்ளார். அவர் மீண்டும் அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்றார்.

ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறச் செய்த எதிர்ப்புகள் மற்றும் நாசவேலைகளை அதிகரிப்பதில் பாகிஸ்தானின் வெளிநாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அதன் சீன புரவலர்களின் கையை இங்குள்ள புலனாய்வு அமைப்பு பார்க்கிறது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற கடும்போக்கு ஜமாத்-இ-இஸ்லாமி பங்களாதேஷின் மாணவர் பிரிவான இஸ்லாமிய சத்ர ஷிபிரின் (ICS), தெருக்களில் கொழுந்துவிட்டு போராட்டத்தை புரட்டிப் போடுவதில் மிகவும் நுட்பமாக இல்லாத கையை இங்கு அடையும் தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஹசீனாவிற்குப் பதிலாக பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நட்புறவு கொண்ட மற்றும் இந்திய-எதிர்ப்பு பயங்கரவாத குழுக்களுக்கு விருந்தோம்பும் ஒரு ஆட்சியை ஹசீனாவை மாற்றுவதற்கான உறுதியான முயற்சியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஏற்கனவே  கடந்த 2022-ம் ஆண்டில் இலங்கை அரசுக்கு எதிரான மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கு சமூக வலைதளங்களில் வெளியான பல வீடியோக்கள் என்றும், அதைப்பார்த்தே சமூக விரோதிகள் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்த போராட்டத்தின்போது,   இலங்கை நாடாளுமன்றம், இலங்கை அதிபரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு, சூறையாடப்பட்டன. இதே பாணியில் வங்கதேச போராட்டம் வழிநடத்திச் செல்லப்பட்டது. வங்கதேச நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம் சூறையாடப்பட்டு உள்ளன. பல்வேறு அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டையும் வன்முறை கும்பல் சூறையாடியிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.