பெங்களூர்:
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய கூடாது என்ற மத்திய அரசின் உத்ததரவு மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது, மாட்டிறைச்சி விற்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை நாடு முழுக்க தடை செய்வதாக அறிவித்தது.
இந்த சட்டதிருத்தத்துக்கு நாடு முழுவதும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தனி மனித சுதந்திரத்தில் மத்தியஅரசு தலையிடுவதாக கருத்துதெரிவிக்கப்பட்டு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த சட்டத்திருத்தத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என புதுச்சேரி மற்றும் கேரள முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையிர் கர்நாடக முதல்வர் சித்தராமையையும் மத்திய அரசின் உத்தரவு மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று அதிரடியாக கூறி உள்ளார்.
மேலும், மத்திய அரசால் மாநில உரிமைகளில் தலையிட முடியாது என்றும், மத்திய அரசின் சட்ட திருத்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து படித்து பார்த்துவிட்டு கருத்து கூறுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசின் அறிக்கை தங்களுக்கு இதுவரை வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் கருத்துக்கூறிய கேரளா முதல்வர் பிரனாயி விஜயனும், இதுவரை மத்தியஅரசிடம் இருந்து இதுகுறித்து எந்தவித அறிக்கையும் வரவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.