வாஷிங்டன்

திபெத் விவகாரம் குறித்து அமெரிக்கா மற்றும் சீனாவின் இடையே உள்ள சர்ச்சைகள் வலுவடைந்து வருகின்றன.

திபெத் குறித்து அமெரிக்காவுக்கு சீனாவுக்கு ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் உள்ளன.  திபெத் சீன நாட்டின் ஒரு அங்கம் என சீனா தெரிவித்தாலும் அதை திபெத் ஒப்புக் கொள்ளாமல் உள்ளது.   சீனாவின் கொள்கைகள் மற்றும் சட்டங்களால் தங்கள் மொழி மற்றும் அடையாளங்கள் பாதிப்பு அடைவதாக திபெத்தியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

திபெத்தியர்கள் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.   ஆகவே திபெத் தலைநகரான லாசாவில் அமெரிக்கத் தூதரகம் அமைக்கச் சீன அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.   அதையொட்டி அமெரிக்க அரசு திபெத் தலைநகர் லாசாவில் அமெரிக்கத் தூதரகம் அமையும் வரை அமெரிக்காவின் எந்த பகுதியிலும் புதிய சீன தூதரகம் அமைக்க  அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது.

சீனர்களின் அடக்குமுறை காரணமாக புத்த மதத் தலைவர் தலாய் லாமா அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்.  அவருக்கு வயது அதிகமாகி உள்ளதால் புதிய தலாய் லாமாவை தேர்வு செய்ய உள்ளனர்.  அடுத்த தலாய் லாமா நிச்சயம் சீனராக இருக்க மாட்டார் என அமெரிக்கா தெரிவித்தது.   இதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் எதிர்ப்பு தெரிவித்த சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அது மட்டுமின்றி சமீபத்தில் அமெரிக்க அரசு திபெத் ஆதரவு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.  அதன்படி  திபெத்துக்கு சிறப்பு அதிகாரங்கள் கிடைக்க அமெரிக்க அரசு உதவ உளது.   அத்துடன்  திபெத் சமீபத்தில் இயற்றியுள்ள மனித உரிமை கொள்கை தீர்மானங்கள் மற்றும் நீர்வள மேம்பாட்டுத் தீர்மானங்களுக்கும் உதவ அமெரிக்கா முன் வந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த திபெத் ஆதரவு தீர்மானம் சீனாவில் கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.  ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையில் இருந்த வர்த்தகப் போர் முடிவடையும் நிலையும் திபெத் குறித்த சர்ச்சைகள் வலுவடைவதால் இரு நாட்டு மக்களும் கலக்கம் அடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.