மும்பை

லகக் கோப்பையை வென்ற இந்திய இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்குப்பட்டோருக்கான இளையவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்று நேற்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.  இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின,  இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு  செய்தது.

இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.  அடுத்து இந்திய அணி களத்தில் இறங்கியது.  இந்திய அணியில் ரகுவன்ஷி, ஹர்னுார் ஜோடி தொடக்க வீரர்கள்ளக களம் இறங்கி 2வது பந்தில் ரகுவன்ஷி (0) அவுட்டானார்.  பிறகு ஹர்னுார், துணைக் தலைவர் ரஷீத் இணைந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி  அவர் 21 ரன்னில் அவுட்டாக இந்திய அணி 17.3 ஓவரில் 49/2 ரன் மட்டும் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ரஷீத் சற்று வேகம் காட்டி அரைசதம் அடித்து) அவுட்டானார். அதற்கு அடுத்த சில நிமிடத்தில் கேப்டன் யாஷ் துல் 17 ரன்களில் வெளியேறினார். நிஷாந்த், ராஜ் பாவா இணைந்து அணியை மீட்டனர். ரேகன் பந்துகளில், ராஜ் பாவா ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க இந்தியா வெற்றியை நெருங்கிய நிலையில் ராஜ் பாவா (35), டாம்பே (1) அவுட்டாகினர்.

நிஷாந்த் ஜூனியர் ‘உலக’ அரங்கில் முதல் அரைசதம் எட்டிய நேரத்தில். மறுபக்கம் தினேஷ் பானா அடுத்தடுத்து இரு சிக்சர் அடிக்க இந்திய அணி 47.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. இதையொட்டி 4 விக்கெட்டில் வெற்றி பெற்ற இளையவர் இந்திய அணி 5வது முறையாக உலக கோப்பை வென்றது

பிசிசிஐ செயலர் ஜெய் ஷா இளையவர் கிரிக்கெட் அணி வீரர்களுக்குப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த அணியில் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் தலா  ரூ.40 லட்சம்  மற்றும்  துணை ஊழியர்களுக்கு தலா ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.  ரசிகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்துகளைக் குவித்த வண்ணம் உள்ளனர்.