இஸ்தான்புல்
விராட் கோலியை ஒரு நாள் போட்டி தலைவர் போட்டியில் இருந்து விலக்கியதற்கு பிசிசிஐக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்குத் தலைவராக இருந்தார். அவர் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு 20 ஓவர் போட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் உலக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.
இந்நிலையில் 20 ஓவர் போட்டியில் தலைவராக இருந்த ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கும் பிசிசிஐ ஆல் அதிரடியாக அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். விராட் கோலி இந்த பதவியில் இருந்து தாமாகவே விலகுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் விலகாததால் அவரை விலக்கி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு விராட் கோலியை நீக்கியது குறித்து பாகிஸ்தான் வீரர் சல்மான் படி கடும் கண்டனம் தெரிவித்துளர்.
சல்மான் பட், “விராட் கோலி 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு பதவி விலகுவதை கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளுக்கு வெவ்வேறு அணித்தலைவர் இருப்பது சரியாக இருக்காது என்பதால் கோலியிடம் இருந்த ஒருநாள் அணித்தலைவர் பொறுப்பு ரோகித் சர்மாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சரியானதுதான்.
ஆயினும் இந்த விவகாரத்தில் விராட் கோலியை கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம்தான் சரியில்லை. கோலி பதவி விலக 2 நாள் கெடு விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரத்தை இது காட்டுகிறது. பிசிசிஐ விராட் கோலிக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும். ” எனக் கூறி உள்ளார்.