மும்பை:
டப்பு ஐபிஎல் சீசனுக்கான பிளே-ஆஃப் சுற்று அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

15வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால், அனைத்து லீக் போட்டிகளையும் மும்பை, புனே ஆகிய 2 நகரங்களில் இருக்கும் 4 மைதானத்தில் மட்டும் நடத்தி வருகிறது.

இந்நிலையில்,நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பிளே-ஆஃப் சுற்று அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று…

  • மே 24
    • குவாலிபையர் 1 – கொல்கத்தா
  • மே 25
    • எலிமினேட்டர் – கொல்கத்தா
  • மே 27
    • குவாலிபையர் 2 – அகமதாபாத்
  • மே 29
    • இறுதிப்போட்டி – அகமதாபாத்