உலகெங்கிலும் பிரபலமான பி..பி.சி. தொலைக்காட்சியில் பலரும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி. “ப்ரேக்ஃபாஸ்ட்”. இந்த நிகழ்ச்சியை நடத்தும் விக்டோரியா ஃப்ரிட்ஸ்.. ரொம்பவே பிரபலம்.

victoria1

திருமதி ஃப்ரிட்ஸூக்கு வரும் டிசம்பர் மாதம்தான் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் நிர்ணயித்திருந்தார்கள். ஆனால் கடந்த செவ்வாயன்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது.
“இதில் என்ன நியூஸ்” என்கிறீர்களா… அவர் நியூஸில் இருக்கும்போது பிரசவ வலி வந்ததுதான் நியூஸ். ஆம்.. அவரது பிரேக் ஃபாஸ்ட் நிகழ்ச்சியை நேரலையாக (லைவ்) நடத்திக்கொண்டிருந்தபோதுதான் பிரசவ வலி வந்துவிட்டது.ஆனால், தனது வலியை காட்டிக்கொள்ளாமல் நிகழ்ச்சியை வழக்கம்போல சிறப்பாக முடித்தார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வலி அதிகமாக.. பனிக்குடம் உடைந்துவிட்டது.மிக இக்கட்டான சூழல் என்பதை அப்போதுதான் உடனிருந்த பி.பி.சி. பணியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உடனே விக்டோரியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விக்டோரியாவின் கணவருக்கு தகவல் சொல்லப்பட அவர் பதறியடித்து வந்திருக்கிறார். ஆனால் வழியில் டிராபிக் ஜாம். நல்லவேளையாக, விக்டோரியாவுடன் பிபிசி ப்ரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் சாலி நியூஜெண்ட் என்கிற தோழி, அருகிலேயே இருந்திருக்கிறார்.. பிரசவம் வரை.

victoria2

கணவர் வருவதற்குள் விக்டோரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துவிட்டது. டிவி நிகழ்ச்சியில் மட்டுமன்றி வாழ்க்கையின் மிக இக்கட்டான தருணத்திலும் தன்னருகில் துணையாக நின்ற தனது தோழி சாலி நியூஜெண்ட்டுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் விக்டோரியா