ரியங்காவு

பாலருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோடையில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மற்றும் தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு அளவுக்கதிகமான  சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில தினங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளது.

எனவே குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஆரியங்காவு பகுதியில் உள்ள பாலருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. தற்போது மழை தீவிரமடைந்துள்ளதால் பாலருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க கேரளா வனத்துறை  தடை விதித்துள்ளது. வனத்துறை தண்ணீர் விழக்கூடிய தடாகம் பகுதியில் தண்ணீரின் அழுத்தம் அதிகரித்து உள்ளதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அந்த பகுதியில் தண்ணீர் குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.