சென்னை: டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு திட்டம் கொண்டு வரப்படும் என டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் மதுபானங்களில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாவும் புகார்கள் உள்ளது. இதுமட்டுமின்றி, கடை திறக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல கடைகள் 24மணி நேரமும் இயக்கி வருகின்றன. 24மணி நேரமும் குடிமகன்கள் மதுபானக் கடைகளில் காணப்படும் சூழலும் உள்ளது.

இந்த நிலையில்,  டாஸ்மாக் நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்கள் மீது விரைவில் பார்கோடு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை பாதுக்காப்பாக வைக்க கடைகளுக்கு லாக்கர்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.