சென்னை:

ங்கிகளுக்கு தொடர் விடுமுறை என செய்திகள் பரவி வரும் நிலையில், வங்கிகள் இயங்கும விவரம் குறித்து அகில இந்திய வங்கிகளின் அதிகாரிகள் கூட்டமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது.

அதன்படி வரும் வியாழக்கிழமை (நாளை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வங்கி விடுமுறை என்றும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பெரிய வெள்ளி பண்டிகையை ஒட்டியும் வங்கிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை (31) வங்கி வழக்கம் போல் செயல்படும் என்றும், அன்று இரவு 8 மணி வரை அனைத்து வங்கிளும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பது வதந்தி என்று தெரிவித்துள்ள வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு,  ஏப்ரல் 2ந்தேதியும் வழக்கம் போல் வங்கிகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தலைவர் டி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் தெரிவித்துள்ளார்.