மும்பை:
22 ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலத்துக்காக ஜெட் ஏர்வேஸை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், நஷ்டமடைந்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வங்கிகள் தொடர்ந்து கடன் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ், இடைக்கால நிதியாக ரூ.400 கோடி கிடைக்காததால் தனது சேவையை நிறுத்திவிட்டது.
முதலீட்டாளர்களை அழைத்தால் இந்த நிறுவனத்தை மீண்டும் தொடர முடியும்.
அது நடக்காவிட்டால், 22 ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜெட் ஏர்வேஸை அரசே நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.