மும்பை
மும்பையை சேர்ந்த பரேக் அலுமினெக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள் வங்கியில் ரூ, 4000 கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையை சேர்ந்த பரேக் அலுமினெக்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பரேக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆக்ஸிஸ் வங்கியை அணுகி உள்ளார். அவர் தனது நிறுவனத்தின் நிர்வாக முதலீடுக்காக ரூ.1275 கோடி உதவிய கேட்டுள்ளார். இது குறித்து தனது நிறுவனத்தின் இயக்குனர்கள் மீட்டிங் குறித்து அறிக்கையை சமர்பித்துள்ளார்.
அதையொட்டி மூலப் பொருள் வாங்க ஆக்ஸிஸ் வங்கி கடன் உறுதிக் கடிதம் அளித்துள்ளது. அதை வைத்து ரூ.250 கோடி வரை இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது. இந்த புகாரை ஒட்டி காவல்துறை இந்த நிறுவனத்தின் இயக்குனர்களான பவார்லால் பண்டாரி, பிரேம்லால் கோராகாந்தி, கமலேஷ் கனுங்கோ ஆகிய மூவரையும் கைது செய்துள்ளது,. தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறை இது குறித்து, “ஆக்ஸிஸ் வங்கி இந்த நிறுவனத்தின் மீதும், இதன் மறைந்த இயக்குனர் பரேக் உட்பட அனைத்து இயகுனர்கள் மீதும் புகார் அளித்துள்ளது. இந்த ஊழலில் வங்கி அதிகாரிகளும் இடம் பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. மேலும் இந்த நிறுவனம் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட பல வங்கிகளில் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மொத்தம் ரூ.4000 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிறுவனம் வங்கி நிதியை கட்டுமானத் துறை உட்பட தங்களின் பல தொழிலுக்கு மாற்றி உள்ளது. இந்த நிறுவனம் திவால் ஆகி விட்டதாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு திவால் மனு அளித்துள்ளது.” என கூறி உள்ளது.