ஒய்.எஸ்.சவுத்ரி பல்முகம் கொண்ட தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி.
இவர் இந்திய அரசின் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர், ராஜ்யசபா எம்.பி.(தெலுங்கு தேசம் கட்சி), மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிகவும் நெருக்கமானவர்.
மேலும் இவர் இயக்குனராக வுள்ள மொரீஷியஸில் உள்ள ‘சுஜானா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், அந்நாட்டில் உள்ள வங்கியில் வாங்கிய 106 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், ஐதராபாத் கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதன் விசாரணைக்காக, மூன்று முறைக்கு மேல் சம்மன் அனுப்பப் பட்டும் இதுவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, நீதிமன்றம் ஒய்.எஸ்.சவுத்ரிக்கு , ‘பிடிவாரன்ட்’ உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் அருண்ஜெட்லி ‘வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பித் செலுத்தாது மோசடி செய்பவர்களை தப்ப விடமாட்டோம்’ என உறுதியளித்திருந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரே வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி இருப்பது மத்திய அரசுக்கு அவப்பெயரையே உண்டுபண்ணியுள்ளது.
மோடியின் அமைசரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் குவிந்தவண்னம் உள்ளன.
முதலில் சுஷ்மா சுவராஜ் மீது ஐ .பி.எல். புகழ் லலித்மோடிக்கு விசா பெற உதவிய ரகசியம் வெளிவந்தது.
பிரகு, அருண் ஜெட்லி மீது டெல்லி கிரிக்கெட் வாரியத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆம்.ஆத்மி கட்சி கேள்விக் கணைகள் தொடுத்ததை செய்தியாகப் பதிவு செய்திருந்தோம்.
இன்னும் என்ன அதிர்ச்சி நமக்கு காத்திருக்கின்றதோ !