டில்லி:
வங்கி கடன் மோசடி தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழான டெக்கான் கிரானிக்கல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அப்போது 5லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாத நிலையில், கடன் மோசடி தொடர்பான வழக்கில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழின் உரிமையாளர் வெங்கட்ராம ரெட்டி மற்றும் விநாயகரெட்டி ஆகியோரது, ஐதரபாத் மற்றும் டில்லியில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியான சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது, டெக்கான் கிரானிக்கல் உரிமையாளர் வீட்டில் இருந்து, அசையா சொத்துகள், டிஜிட்டல் ஆதாரங்கள், 5 லட்சம் ரூபாய்க்கான பழைய ரூபாய் நோட்டு கட்டுகள், இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடன் பெற்ற தொகை யாருக்கு திருப்பி விடப்பட்டது என்று டிஜிட்டல் ஆதாரங்களைக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஊடகத்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.