டில்லி

ங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

நாட்டில் பல வங்கிகள் தனியார் மயமாகி வருவதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் சாதாரண மக்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால் வங்கி ஊழியர்களும் இதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.   இதையொட்டி வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

அதன்படி அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் இன்றும் நாளையும் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு ஊழியர் சங்கங்கள் பங்கேற்கின்றன.  எனவே இந்த இரு தினங்களுக்கு வங்கிகளில், டெபாசிட், செக் கிளியரன்ஸ் மற்றும் கடன் வழங்குதல் பாதிப்பு அடைய உள்ளன.

மக்கள் பணம் எடுக்க வசதியாக ஏ டி எம் கள் இயங்கும் என்றாலும் அவற்றில் பணம் போட ஊழியர்கள் இல்லாததால் விரைவில் அவை வறண்டு விடும் அபாயம் உள்ளது.    இந்த வேலை நிறுத்தத்தில் தனியார் வங்கி ஊழியர்கள் இணையவில்லை என்பதால் அங்கு பணிகள் வழக்கம் போல் நடக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.