டில்லி

ங்கியில் முதலீடு செய்தோரின் முதலீட்டுக்கான காப்பீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக  நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி திவாலாகும் வேளையில் அந்த வங்கியில் முதலீடு செய்தவர்களின் தொகைக்காக காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது.

அதாவது வங்கி திவாலாகும் நேரத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் ரூ.1லட்சம் வரை திரும்பப் பெற முடியும்

இன்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செது வுரும் நிதி நிலை அறிக்கையில் இந்த வரம்பு ரூ.5 ல்ட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது இனி வங்கிகள் திவாலானால் முதலீட்டாளர்களுக்கு தங்கள் முதலீட்டில் எஊ.5 லட்சம் வரை திரும்ப பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.