சென்னை:
சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய ரூபா நடிகர் கமல்ஹாசனை டில்லியில் கமல்ஹாசனை இன்று சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் ரூபா வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ ஒருவரை நான் சந்திப்பதாலோ அல்லது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதாலோ நான் அவருடைய கொள்கைகளையும், செயல்பாடுகளையும் ஏற்றுக் கொள்வதாக ஆகிவிடாது.
மேலும் இது எனது பணியில் ஒரு போதும் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஒருவர் பல தரப்பினரையும் சந்தித்து பேசுவதால் அவர் தனது சுயதன்மையை இழந்துவிடுவது இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.