டாக்கா:
பங்களாதேஷ் மலைப்பகுதியான ரங்கமாட்டி, காக்ராச்சாரி மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி என்னும் பழங்குடியினர் கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்த கட்சியில் இருந்து விலகி ஜனசங்கதி சமிதி என்ற புதிய கட்சியை ஷக்திமான் சக்மா என்பவர் உருவாக்கினார். இவர் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நானியாச்சாரில் அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் பழங்குடியின தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களில் சிலர் அவ்வழியாக சென்ற பஸ்சை மறித்து துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த தகவல் பரவியதும் ரங்கமாட்டி, காக்ராச்சாரி மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.