இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உதவியாளர் கூறியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வங்கதேச ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) ALM ஃபஸ்லுர் ரஹ்மானின் இந்த பேச்சு இந்திய அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் அசினா-வுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறதை அடுத்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தானை தாக்கும் அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற பங்களாதேஷ் சீனாவின் உதவியைக் கோர வேண்டும் அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.