டாக்கா:
இந்தியாவுடன் நிதி போட்டியை ஏற்படுத்தும் வகையில் புதிய செயற்கைகோளை பங்களாதேஷ் விண்ணில் செலுத்தியுள்ளது.
‘பங்கபந்து 1’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் சர்வதேச நேரப்படி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 1.44 மணிக்கு ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஃபிரான்ஸ்&இத்தாலி நிறுவனமான தலேஸ் அலெனியா விண்வெளி நிறுவனம் தயாரித்ததாகும். இந்நிறுவனம் ஐரோப்பாவில் மிகப்பெரிய செயற்கைகோள் தயாரிப்பாளராகும்.
இச் செயற்கைகோள் 40 டிரான்ஸ்பான்டர்களை கொண்டு செல்கிறது. இதில் 50 சதவீதம் பங்களாதேஷின் அண்டை நாடுகளுக்கு தொலைதொடர்பு சேவை வழங்க பயன்படும். இந்த பகுதிகளில் இந்தியா மட்டுமே தற்போது வரை சேவை வழங்கி வருகிறது. வடக்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியா வழங்கி வரும் செயற்கைகோள் சார்ந்த சேவைகளுக்கு பங்களாதேஷ் கட்டண அடிப்படையில் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.