டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், வங்கதேசம் 430 ரன்களை அடித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் 8ம் நிலை வீரர் மெஹிதி ஹசன் 103 ரன்களை விளாசினார். துவக்க வீரர் ஷத்மன் இஸ்லாம் 59 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 68 ரன்களும் அடித்தனர். முஷ்பிகுர் ரஹிம் மற்றும் லிட்டன் தாஸ் தலா 38 ரன்களை அடித்தனர்.

இறுதியில், 150.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த வங்கதேச அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 430 ரன்களைச் சேர்த்தது.

விண்டீஸ் தரப்பில் ஜோமல் வேரிகன் 4 விக்கெட்டுகளை சாய்க்க, ரக்கீம் கார்ன்வால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தற்போது, தனது முதல் இன்னிங்ஸை துவக்கியுள்ள விண்டீஸ் அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்களைச் சேர்த்துள்ளது.