பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம் சென்றுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தியர்களை பத்திரமாக இருக்க அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டு தலைநகர் டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் இந்தியாவில் இருந்து டாக்காவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]