டெல்லி:  வங்கதேச விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்தள்ளது.

வங்கதேச விவகாரத்தில் அடுத்தகட்டமாக இந்திய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறைஅமைச்சர் அமித்ஷா  மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்  நிலையில், வங்காளதேச விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வங்க தேச விவகாரம் மற்றும் இந்திய அரசின் நிலை என்ன என்பது குறித்து  தலைவர்களுக்கு விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

பங்களாதேஷின் டாக்காவில் ஏற்பட்ட வன்முறை காரணமாக,  பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா செய்து வந்து இந்தியாவில் தஞ்ச மடைந்துள்ளார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவரை சந்தித்தார். . அவள் தங்கியிருப்பதையோ திட்டங்களையோ அவர்கள் விவரிக்கவில்லை.  ஹசினாவின்  ராஜினாமாவை   மக்கள் கொண்டாடும் போது அவரது சுவரோவியம் எதிர்ப்பாளர்களால் அழிக்கப்பட்டது. மேலும் அங்கு இந்திய எதிர்ப்பு அரசாங்கத்தை உருவாக்க பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தங்களது ஆதரவாக பயங்கரவாத அமைப்‘பினை கொண்டு செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று   காலை 10 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து அனைத்துகட்சி இன்று பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில், வெளியுறவுத்துறை எஸ் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி, டிஆர் பாலு, லாலன் சிங், ராம்கோபால் யாதவ், சுதிப் பந்தோபாத்யாய், மிசா பார்தி, அரவிந்த் சாவந்த், சஸ்மித் பத்ரா, சுப்ரியா சுலே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்டை நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களுக்கு விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்க தேச கலவரத்துக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி – ஷேக் ஹசீனாவை வீழ்த்தி இந்திய எதிர்ப்பு அரசை நிறுவ முயற்சி…