ராய்ப்பூர்
ராய்ப்பூர் விமான நிலையத்தில் 9 ஆண்டுகளாக ஒரு வங்க தேச விமானம் நின்றுக் கொண்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, டாக்காவில் இருந்து மஸ்கட் செல்லும் வழியில் 173 பயணிகளுடன் யுனைடெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரசரமாக தரையிறக்கப்பட்டது. அன்றிலிருந்து தற்போதுவரை 9 ஆண்டுகளாக அந்த விமானம் அங்கேயே நிற்கிறது. தற்போது தற்போது மிகப் பெரிய இரும்புக் கழிவாக மாறி உளளது
இந்த விமானம் குறித்து வங்கதேசத்திலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்று இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .இந்த விமானத்தை நிறுத்திவைத்திருக்க கட்டணமே இதுவரை ரூ. 4 கோடியை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, விமானப் பொறியாளர்கள் குழுவினர் வங்கதேசத்திலிருந்து வந்து தொழில்நுட்பப் பிரச்னையை சரி செய்து விமானம் பறக்கத் தயாரானது. அதன் பிறகும் விமானத்தை டாக்காவுக்குக் கொண்டு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வங்கதேச விமானம் நீண்ட நாள்களாக இங்கு நிறுத்ப்பட்டிருப்பது குறித்து விரைவில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.