டாக்கா
ஊழல் வழக்கில் வங்க தேச பெண் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இருமுறை வங்க தேச பிரதமராக பதவி வகித்தவர் கலீதா ஜியா. மறைந்த முஜிபுர் ரகுமானின் மகளான இவர் மீது ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. அதை ஒட்டி வங்க தேச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
அவரது கட்சி தொண்டர்கள் அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டால் வீதிக்கு வந்து போராடுவோம் என அறிவித்திருந்தனர். அதை ஒட்டி வங்க தேசத்தில் இன்று காலை முழுவதும் நாடெங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டிருந்தன.
இன்று வங்க தேச நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கு தீர்ப்பு கூறப்பட்டது. அதை யொட்டி நீதிமன்ற வளாகம் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.
நீதிபதி முகமது அக்தருசமான் இன்று தீர்ப்பை வழங்கினார். அவர் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளார். இதனால் வங்க தேசம் பரபரப்பு அடைந்துள்ளது.