பெங்களூரு
பெங்களூரு நகரில் அமைந்துள்ள பிரபல உணவு நிறுவனமான எம் டி ஆர் நிறுவனம் கொரோனா பரவல் காரணமாக சீலிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் புகழ் பெற்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் எம் டி ஆர் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும்.
பிரபல எம் டி ஆர் குழுமத்தை சேர்ந்த இந்நிறுவனம் மசாலா பொருட்களைத் தயாரித்து நாடெங்கும் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனத் தொழிற்சாலை பெங்களூரு நகரில் உள்ள பொம்மனஹள்ளியில் அமைந்துள்ளது.
தற்போது கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அகில இந்திய அளவில் கர்நாடகா மாநிலம் கொரோனா தொற்றில் குஜராத்தை பின் தள்ளி 4 ஆம் இடத்துக்கு வந்துள்ளது.
எம் டி ஆர் தொழிற்சாலையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.
இதையொட்டி இந்த தொழிற்சாலை மூடப்பட்டு சீலிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]